மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வராது என்று நினைத்த பணம் கூட வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எதிர்பாராத செய்தி ஒன்று காத்திருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியற்ற சூழல் காணப்படும் எனவே நிதானத்தை கைவிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று துணிச்சலுடன் செயல்படக்கூடிய அமைப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே அமைதி தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் உங்களை நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்து போவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம் :
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுலபமான பணிகளை கூட போராடி முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைப்பது நல்லது. மற்றவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று சிறு சிறு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். முன்பின் தெரியாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களை பற்றிய பேச்சு வார்த்தை வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற ஒப்பந்தங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று திடீர் முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அனுபவ ரீதியாக சில விஷயங்களை முறையாக கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செயல்படுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று சற்று கோபமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய சரக்குகளும் விற்பனையாகும். கணவன் மனைவி இடம் அன்பு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் நயமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியம் ஏற்றம் காணும்.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுவீர்கள். எதையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயத்தில் சாதகமான தீர்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சவாலான வேலைகளை கூட சுலபமாக செய்து காட்டிவீர்கள். ஆரோக்கியத்தில் நலம் உண்டாகும்.