மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எந்த ஒரு விஷயத்தையும் குழப்பிக் கொள்ளாமல் தீர்க்கமாக முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற மன கவலைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டிய பின்னர் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று எந்த ஒரு விஷயத்தையும் குறைவாக மதிப்பீட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் அரிய சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய சொந்த முயற்சியால் அனுகூலமான பலன்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தெம்பும், தைரியமும் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பழைய சிக்கல்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரலாம், நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று எப்பொழுதும் உற்சாகம் நிறைந்த இன் முகத்துடன் காணப்படுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் விஷயங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இதுவரை இருந்து வந்த தாமதங்கள் மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தாமதப்பட்ட காரியங்களையும் வேகமாக நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காமல் எந்த ஒரு விஷயத்தையும் விடாப்பிடியாக மனம் தளராமல் முடித்துக் காட்டுவது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய நட்பு வளரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் சிறுசிறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சி தரும் செய்திகளை கேட்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் அனுசரித்து செல்லுவீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனிக்கவும்.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிர்பாராத பண விரயத்தை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற நபர்களிடம் உங்களுடைய சொந்த கதையை சொல்ல வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் நடக்கும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் வீண் செலவுகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று சாதகமான பலன்களை காண இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று சாதுரியாத்தால் நிறையவே சாதிக்க இருக்கிறீர்கள். உங்களுடைய அறிவாற்றல் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் அமையப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பேசி பழகுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு கவனம் தேவை. ஆரோக்கியம் ஏற்றம் காணும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று ஆடம்பர செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பேசிக்கொள்ள வேண்டாம். சுப காரியத்தில் இருந்து வந்த அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்தும். சுயதொழிலில் உள்ளவர்கள் பொறுமையுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதையும் சமாளிக்கும் திறமை இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அனாவசிய கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோக பூர்வ முடிவுகளில் கட்டுப்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையில் அலட்சியம் வேண்டாம்.