மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று காலை முதல் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து தெளிவு பிறக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோக பூர்வ முடிகளில் அவசரம் வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று எப்பொழுது இன் முகத்துடன் பேசுவது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுய முடிவுகள் லாபத்தை அதிகரிக்கும். உத்தியோகப் பூர்வ விஷயத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உடல் நலன் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். யாரையும் மட்டம் தட்டி பேச வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து குவியும். கணவன் மனைவி உறவில் விரிசல் விழக்கூடும் கவனம் தேவை. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. உடல் நலன் தேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று அவசரப்படாமல் எதிலும் நிதானம் காப்பது நல்லது. முக்கிய முடிவுகளை ஒத்தி வையுங்கள். சுய தொழிலில் எதிர்பாராத நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புகள் உண்டு எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் எனவே தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று துணிச்சலுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மலை போல் வந்தாலும் பனி போல் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயம் வரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று செய்யக்கூடிய விஷயங்கள் மற்றவர்களுக்கு பாதகம் இல்லாமல் இருப்பது நல்லது. எதையும் பொருட்படுத்தாமல் முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காண புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கடன்கள் வரலாம் விழிப்புணர்வு தேவை. உடல் நல அக்கறை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று பொறுப்பில்லாமல் இருப்பீர்கள். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வரக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்கள் சமயோசித புத்தியால் சங்கடங்களை தவிர்ப்பீர்கள். கணவன் மனைவி உடைய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்வீர்கள். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று எதையும் ஒரு முறை பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் முறை போட்டிகள் வலுவாகும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உடல்நல பாதிப்புகளை அவ்வபோது கவனிக்க வேண்டும்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் காண போகிறீர்கள். நீண்ட நாள் போராட்டத்திற்கு முடிவு கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற போராட்டங்களை விடுத்து அறிவுபூர்வமாக சிந்திப்பது நல்லது. ஆரோக்கியம் ஏற்றும் காலம் .
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய சுய புக்தியை தீட்டுவது நல்லது. கண்களால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்வீர்கள். சுப காரிய தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சுய தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வரவை காட்டிலும் செலவு கூடும் எனவே கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை பேசி பெரிதாக்காமல் விட்டு விடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் வந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று எந்த ஒரு விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் வலுவாகும் என்பதால் உங்களுடைய ஒத்துழைப்பை அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.