மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் தடங்கலான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு உறவினர்கள், நண்பர்கள் வழியில் வீண் பொருள் விரயம் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் லாபம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் வாகனங்களை இயக்கும்போது கவனமுடன் செயல்பட வேண்டும். பணியிடங்களில் பணிச்சுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் சரளமான நிலையிருக்கும். சிலர் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் உறவினர்கள் வழியில் தன லாபம் பெறுவார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் தினமாக இருப்பதால் வெளியில் செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.. வீண் வம்பு வழக்குகள் வந்து சேரும். சிலருக்கு சிறிய அளவிலான உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சராசரி நாளாகவே அமையும். எதிலும் போராடி வெற்றி பெறும் சூழல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
கன்னி:
கன்னி ராசியிர் இன்றைய தினம் புதிய நபர்களால் ஆதாயம் பெறுவார்கள். சிலர் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் பெரிய மனிதர்களின் தொடர்பால் எதிர்பாராத உதவி கிடைக்கும். மிகவும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் சவாலான காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் கௌரவம் பெறுவார்கள். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். எதிர்பார்த்த கடன் தொகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். குழந்தைகளால் கௌரவம் ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான விடயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி பெறுவார்கள். ஒருசிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள்.
மீனம்:
மீனம் ராசியினர் இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.