மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளில் எதுவும் ஈடுபட வேண்டாம். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு லாபம் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் தாராள பொருள் வரவு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பணம் கொடுக்கல்-வாங்கலில் இழுபறி நிலை நீடிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நலம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் வருமானம் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் மக்களிடம் செல்வாக்கை பெறுவார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சராசரியான நிலையே இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பெறுவார்கள். குடும்பத்தினரால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் தொடர்பான விடயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் சுமாரான நிலையே இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவார்கள். ஈடுபட்ட காரியங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவார்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் உடல் மற்றும் மனம் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலை காணப்படும். சிலருக்கு தொலை தூரப் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிறருக்கு கொடுத்த கடன் தொகையை வட்டியுடன் திரும்ப வந்து சேரும்.
கும்பம்:
கும்பம் ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைக்கலாம். ஒரு சிலர் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் பொருளாதார ஏற்றம் காண்பார்கள். பணியிடங்களில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். குடும்பத்தில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீன் அலைச்சலால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம்.