மேஷம்:
மேஷத்தில்பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பயணங்களால் அதிருப்தி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான தினங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் புதிய தன்னம்பிக்கை துளிர்விடும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்களை மற்றவர்கள் நிராகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களின் உதவிகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக செய்து முடிக்க வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு விரிசல்கள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களால் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். லாபம் நிறையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தை நடத்துபவர்கள் சிக்கனமாக செலவழித்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன ஒருமைப்பாடு உண்டாவதில் தடை ஏற்படும். வேலையில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வலிய வந்து சிலர் உதவி செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு ஏற்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மட்டும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சில விஷயங்கள் நடைபெறும், பொறுமை காப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாமர்த்தியமாக நீங்கள் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவது கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது அத்தியாயம் துவங்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் முற்றுப்புள்ளி வைத்த பின்பு மீண்டும் துவங்க வேண்டாம். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். சுய தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கடன்கள் உண்டாகும் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் உற்சாகம் பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு இதனால் உடல் சோர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையில்லாதவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகிப்புத்தன்மை அதிகம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். முன் கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிடிவாத குணம் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை. சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் காணப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்றவர்களை நம்பி ஏமாந்து போக வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.