மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. துணிவு உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதனை படைக்கும் நாளாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு விரிசல் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைக்கு உரிய பயனை பெறப் போகிறீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு காரணம் இல்லாமல் சினம் எனக்கூடும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். உங்களுடைய விடா முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயத்தில் அனுகூல பலன் கிட்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் உங்களுடைய சமயோசித புத்தியை பயன்படுத்தி அனுகூல பலன் பெற போகிறீர்கள். தாமதிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் பெருகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் இந்த நாள் புதிய பொறுப்புகளை ஏற்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் மூன்றாம் நபர்களை நம்பி புதிய காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய முக்கிய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். சுப காரியத்தில் இருந்து வந்த தொய்வு மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக உள்ளது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்கள் உங்களை எதிர்த்து எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. எதையும் பலமுறை ஆலோசிப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் என்னும் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் லாபம் பெருகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எதையும் சுயமாக முடிவெடுப்பது நல்லது. பல பேர் பல விதமாக உங்களை குழப்ப முயற்சி செய்வார்கள். கணவன் மனைவி இடையே பிணக்குகள் இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் லாபம் காண்பவர்கள் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை வலுவாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். புதிய தொழில் துவங்குபவர்கள் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. ஆடம்பர பொருட்களில் கவனம் தேவை. சுபகாரிய தடைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் மறைய சமூக பேச்சுவார்த்தை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற இடங்களில் உங்களுடைய பெருமையை பற்றி கூற வேண்டாம். உத்தியோகத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் மீண்டும் விட்டுவிட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பணத்தொகை வசூல் ஆகும். கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனையை வளர்க்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்