மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவை கலவையும் தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி அமைதி பிறக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரக்கூடிய அனுகூல பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைக்காமல் தள்ளி இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் சுமைகள் குறைய ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுவது உத்தமம். கணவன் மனைவிக்குள் இருந்த தேவையற்ற பிணக்குகள் மறையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களைப் புரிந்து கொள்ளாத உறவுகள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் பாச மழை பொழிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எப்போதோ செய்த உதவிக்கு உரிய நன்மைகள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் வலுவாகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் உங்களை திக்கு முக்காட செய்யும். உதவும் மனப்பான்மை இருக்கும் உங்களுக்கு எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதம் ஆகலாம் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்பதால் அமைதி காணலாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற நபர்களிடம் உங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு எதிரான போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே உங்களுடைய திறமையை நீங்கள் நிரூபிக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய அற்புதமான அதிர்ஷ்டங்கள் நிறைந்த அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாதியில் நின்ற வேலைகள், விரைவாக முடிக்கக்கூடிய அமைப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய பொறுப்புகளை சுமக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். யார் பெரியவர் என்கிற போட்டி மனப்பான்மையை கணவன் மனைவிக்குள் மாற்றிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விரோதிகளும் நண்பர்களாக மாற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்ட காரியம் எல்லாம் வெற்றி காணும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெருகக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. விட்டு சென்றவர்கள் உங்களை தேடி வரக்கூடும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் செழிப்படைய வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.