மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் என்பதால் கவலை இன்றி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை பேசி பெரிதாகாமல் அமைதி காப்பது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் வந்து நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் கருத்துடன் மோதல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சொல்ல நினைத்ததை சொல்லாமல் இருந்து விடாதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே தேவையற்ற மனக்கசப்புகளை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து செல்லுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சாமர்த்தியமான பேச்சாற்றலால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரியமானவர்கள் எப்பொழுதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் விலகி மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடைபெற போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுப்பறியாக இருந்த வேலைகள் மடமடவென முடிய துவங்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இருப்பதை வைத்து திருப்தி கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அடிக்கடி சோர்வு காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மதிப்பு மற்றவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பீர்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து கையாளுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் முயற்சிக்கான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சல் பிறக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது நல்லது. அதிக பணி சுமை உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடும். சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுமை காப்பது நல்லது. முக்கிய முடிவுகளை காலதாமதம் செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் கடினமான வேலைகளையும் உங்களுடைய திறமையால் சுலபமாக்கி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன்னேறக்கூடிய நல்ல வாய்ப்புகளை பெறப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். போக்குவரத்தில் முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து, பணி சுமை கூடுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் இனிமையான பேச்சாற்றல் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்க போகிறது. குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் மெல்ல மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள். அவசரம் இழப்புகளை உண்டாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மேலோங்கி காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் நிதானம் தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது பல பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமூகத்தின் மதிப்பும், மரியாதையையும் உயர்த்திக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நயமாக பேசியதையும் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களை விட்டு சென்றவர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்ட கால நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளி உலகத்திற்கு நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். விமர்சனங்களை தவிர்த்து முன்னேறுங்கள்.