மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். ஆரோக்கிய பாதிப்புகளில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்க வாய்ப்புகள் உண்டு எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக நடக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் ஏற்பட்டு வந்த மன கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து செல்லும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக மாறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மறைமுக பகைவர்கள் தொல்லை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் குறைய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் உங்களுடைய இலக்கை அடைவதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால எதிரிகளின் தொல்லை நீங்கும். கணவன் மனைவியிடையே சிறு விரிசல் எழ கூடும் எனவே விட்டுக் கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் நிதானம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பு வாய்ந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் உத்வேகம் தென்படும். பணியில் வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப பொறுப்பு சுமை அதிகரிக்கும் எனவே உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி இருந்து வந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. சுபகாரிய தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த நிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் பொறுப்பு தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகமும், விவேகமும் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள நீங்கள் உங்களுடைய பிடிவாத குணம் தளர்த்திக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே பனிப்போர் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த திருப்பங்கள் வாழ்க்கையில் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு விரிசல் மறையும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் ஆலோசனை தேவைப்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆன்மீக நாட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடைய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் எனவே ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியான போட்டிகள் வலுவாகும் எனவே கூடுதல் ஒத்துழைப்பு செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்கக்கூடிய வல்லமை பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.