மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய திறமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கடினமான சூழ்நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பக்தி பெருக்கெடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானத்தை தவற விடக்கூடாது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்கூட்டியே யோசித்து எந்த ஒரு விஷயத்தையும் செய்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செல்வாக்கு உயரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. சமுதாயத்தின் மீது உங்களுக்கு இருந்து வந்த அக்கறை அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை கூடுதலாக சுமக்க வேண்டி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் தலைமையில் பொறுப்புகள் கூடும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி நல்ல லாபம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம் எனவே கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பே உயர்வை கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே நிதானமான பேச்சு வார்த்தை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்கள் மூலம் ஏற்றம் காணக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் அனுகூல பலன் தரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை அக்கறையோடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய மனப்போக்கு மாறும். இதுவரை நீங்கள் செய்து வந்த தவறை இனி செய்யக்கூடாது என்கிற முடிவு எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி ரீதியான பயணங்கள் அனுகூல பலன் தரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறொன்றாக முடிய கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஒளிவு மறைவின்றி மனதில் பட்டதை பேசுவது நல்லது. சுபகாரிய தடைகள் விலகி வெற்றி வாய்ப்புகள் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை புகுத்த முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கக்கூடும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையான நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகைமை மாறக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஈகோவை தவிர்த்து அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் செலவுக்கு உரிய வரவு வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே அக்கறை கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை, அலட்சியம் ஆபத்தை கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகள் தேவையற்ற சிக்கல்களை உண்டு பண்ணும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அமைதியான சூழ்நிலை தேவை எனவே பேச்சில் இனிமையை கையாளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த சூழ்நிலை நிலவும் என்பதால் தொட்டதெல்லாம் வெற்றியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் உங்களுடைய செய்கை ஒன்றுக்காக பாராட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அதிகரிக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரால் தேவையற்ற டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு மாறும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் சாதக பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.