மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. எடுக்கும் முடிவுகளை சுயமாக எடுங்கள். மற்றவர்களிடம் உங்களின் வேலைகளை திணிக்காதீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளில் அலட்சியம் வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முகத்தில் ஒரு பொலிவு காணப்படும். ஏதோ ஒன்றை நிறைவாக செய்ய இருப்பதாக உணர்வு இருக்கும். வழிப்போக்கர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசிக்கவும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயத்தில் சில ஏமாற்றங்களை சந்திக்க கூடும். எதற்காகவும் மனம் தளர விடாதீர்கள். குடும்ப நபர்களிடம் முன் கோபம் வேண்டாம். புதிய நண்பர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். தேவையற்ற வீண் பகைக்குள் நுழைய வேண்டாம். கற்றது கையளவு என்பதை உணர்வீர்கள். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் துணிச்சலுடன் ஈடுபடக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். பிடித்தவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். பகைவர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. பொது இடங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க முன்பு ஆலோசனை தேவை. அவசர முடிவுகள் வேண்டாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நம்பிக்கை அதிகரித்து காணப்படும். தேவையற்ற சிந்தனைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். நேர விரயம் ஆக வாய்ப்புகள் உண்டு, கவனமுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்தவற்றுக்கு நேர் மாறாக நடக்கும். சொந்த விஷயங்களை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நண்பர்களுடைய ஆதரவை போராடிப் பெற வேண்டி இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வியாக்கியானம் பேசுபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போகப் போவதில்லை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விவகாரங்களில் இருந்து நிதானமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டு பின்னர் புலம்பாதீர்கள். கணவன் மனைவி உறவில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். சுய லாபம் கிடைக்க குறுக்கு வழியை நாடாதீர்கள். எங்கும் எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.