மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இதுவரை பகைத்து முறுக்கிக் கொண்டிருந்த உறவுகள் உங்களிடம் தானாகவே வந்து பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை ஆற போடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய இடங்களில் இருந்து பணம் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதம் ஆகலாம் எனவே பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கோபம் தலைக்கேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் மட்டம் தட்டாதீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய விவரங்களை எவருக்கும் கொடுக்காதீர்கள். குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த ஆற்றல் உங்களுக்கு கை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களுடன் குரலை உயர்த்தி பேசி முன்கோபத்தை காண்பிக்காதீர்கள். சுய தொழிலில் லாபத்தை எதிர்பார்த்த அளவுக்கு பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் நற்பயன் தரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கண்ணியம் மிக்க செயல்களால் நீங்கள் நன்மதிப்பு பெறுவீர்கள். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத இடங்களுக்கு பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்பங்கள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத லாபங்களை காணக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது ஆபத்தை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் கடுமையான போராட்டங்கள் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் மூலம் பிரச்சனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் சமயோசிதமாக செயல்படுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எவரையும் பரிந்துரைக்க வேண்டாம். வாக்குறுதிகளை அள்ளி தெளிக்காதீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல் மெல்ல மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த புதிய பாதைகள் திறக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் பொறுப்புடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளோர் அனாவசிய செலவுகளை செய்வீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்கள் திறமைக்கு உரிய நல்ல விமர்சனங்களை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளோர் கடமையிலிருந்து பின்வாங்காமல் முன்னேறி செல்வது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடும் முயற்சிகளுக்கு ஏற்ப பலன்களையும் பெறுவீர்கள். மற்றவர்களை எளிதாக பகைத்துக் கொள்ள வேண்டாம். தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணம் அதிகம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களால் பிரச்சனைகள் உண்டாகும்.