மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் வெளி நபர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவி வழியில் லாபம் ஏற்படும். வேலையில் தீவிரமாக செயலாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் கனவுகள் அனைத்தும் நனவாகும். புதிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். சிலர் வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லக்கூடும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். வாங்கிய கடன்களை வட்டியுடன் திரும்ப செலுத்துவீர்கள். ஒரு சிலருக்கே எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். குழந்தைகள் பொறுப்புடன் செயலாற்றி உங்களை மகிழ்விப்பார்கள். ஒரு சிலருக்கு பணியிடங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகளை ஈர்ப்பீர்கள். சிலர் கடன் கேட்டு தொல்லை தருவார்கள். பணியிடங்களில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறர் மீது கவனம் அவசியம். புதிய நபர்கள் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் மனசாட்சி படி செயல்பட வேண்டிய நிலை இருக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நலம். எதிலும் துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளால் லாபம் ஏற்படும். தாய் வழி உறவுகளால் மன சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பெண்கள் வழியில் தனவரவு உண்டாகும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி இருக்கும். எதிலும் நன்கு யோசித்தே செயலாற்ற வேண்டும். சிலருக்கு உடல் மற்றும் மனசோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு பணி சுமை கூடும்.