மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உத்வேகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய வேலைகளில் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. வாகன ரீதியான பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் அதிகரிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை மெருகேறும். –
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவீர்கள். முன் பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சவாலான வேலை இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சிரமமான வேலைகளை சுலபமாக செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. எதிலும் உங்களுடைய அனுபவத்தை திணிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த நேரத்தில் வேலைகள் முடியாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேற்று மதத்தவர்களின் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. மன கவலைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் காரிய தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு வெற்றி கூட இறைவழிபாடு தேவை. கணவன் மனைவி இடையே விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் நேரம், காலம் பார்த்து பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சோதனைகள் வரலாம் எனினும் வெற்றி உங்களுக்கு தான்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் வரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் ஒரு பொலிவு காணப்படும். எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டாதவர்களால் சிக்கல் வரலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் புதிய தொழில் துவங்க திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். உங்களுடைய நடவடிக்கையில் மாற்றத்தை கொண்டு வருவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சம் நிலைத்திருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும்.