மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இன்னும் புரியாத மகிழ்ச்சியின் படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு காணாமல் போன சில விஷயங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவழிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனிவான பேச்சு உங்களை உயர்த்தி காட்டும். குடும்ப உறவுகளுக்கு இடையே பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களை தவறாக எடை போட வாய்ப்பு உண்டு என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அடங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மன உளைச்சலை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகோதர வகையில் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற செலவுகள் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரிவுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுப்பது நல்லது. சுய தொழிலில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்வு பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்துள்ளது. குடும்பத்தில் பெரியவர்களை மரியாதை உடன் நடத்துவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் பணவரவு வந்து சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களை உடனே நம்பி விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது சிந்தனை மலரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளை சமூகமாக பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சியால் முன்னேற கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்வரும் விமர்சனங்களை திறம்பட எதிர்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க புதிய யுத்திகளை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை குறித்த நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில விஷயங்கள் காலதாமதம் ஆக வாய்ப்புகள் உண்டு என்பதால் எதிர்பார்ப்புகளை குறைப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வெறுப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நிர்வாக திறன் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சண்டைகள் மறையும். சுய தொழிலில் முன்னேறுவதற்கு தங்களுக்கு கீழ் பணி புரியும் பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் விரிவடையும்.