மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் கூட இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாள வேண்டும். வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு காணப்படும். வேலை டென்ஷனை கொண்டு போய் வீட்டில் இருக்கும் மனைவியிடம் காட்டாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கிடைக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த கான்ட்ராக்ட் உங்கள் பெயருக்கு ஒப்பந்தம் ஆகலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சொந்த தொழில் செய்வதற்கு கடன் வாங்குவதாக இருந்தாலும் முயற்சி செய்யலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனம் தேவை. கவனம் குறைவாக எந்த வேலையையும் செய்ய கூடாது. நீங்கள் செய்யும் சின்ன தவறு பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விட்டு விடும். உஷாராக இருந்துக்கோங்க. சில பேருக்கு எதிராளிகளுடன் போராடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருக்கும். பெரிய அளவில் செலவுகள் வந்து கையை கடிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மற்றபடி சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். உடல் ஆரோக்கிய மேம்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பாராட்டுகள் குவிய போகின்ற நாளாக இருக்க போகின்றது. எல்லா விஷயத்திலும் சாதுரியமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புத்திசாலித்தனத்தை பார்த்து வியக்காதவர்களே இருக்க மாட்டார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். யோகம் உண்டு.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் மகிழ்ச்சியோடு இருக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக பிரச்சனை தந்து வந்த மன கஷ்டம் தீரும். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். முடிந்தால் கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு சென்று வாருங்கள். நினைத்து பார்க்காத நல்லது இன்று நடப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிக்கல் பிடுங்கள் அதிகமாக இருக்கும். யாரையும் சமாளிக்க முடியாது. தொல்லை கொடுப்பதற்காகவே இரண்டு பேர் உங்களை தேடி வர போகிறார்கள். பிரச்சனைகளை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருப்பினும் பொறுமையாக செயல்படுங்கள் முன்கோபடாதீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் இருக்கும். மூன்றாவது நபரின் பேச்சைக் கேட்டு எதையும் செய்யாதீங்க. உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்க. குழப்பி விடுவதற்கு நாலு பேர் சுற்றி இருப்பார்கள். அவர்களை நம்பாதீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லாம் சாதகமாக இருக்கும். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அது நடைமுறையில் நடந்து விடும். மனது மகிழ்ச்சி பெறும். பிள்ளைகளால் பெருமை அடையக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். சிக்கலான பிரச்சனைக்கு கூட எளிமையான தீர்வை கொடுக்கும். அறிவாற்றல் இன்று வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள், உங்களுடைய வேலையில் குறியாக இருக்க வேண்டும். முக்கியமான பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை.