மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்திசாலித்தனம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சிக்கலான வேலையை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் உறுதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையையும் நேருக்கு நேராக எதிர்கொள்வீர்கள். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளைக் கண்ட அஞ்ச மாட்டீர்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசி பஞ்சாயத்தை முடிப்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கப் போகின்றது. எந்த முடிவை எப்படி எடுப்பது என்று சின்ன தடுமாற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். இருந்தாலும், உங்களுடைய விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும்.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்படாதீங்க, நிதானமாக கவனத்தோடு வேலைகளை செய்யுங்கள். முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் தள்ளி போடுங்கள். இன்று நிதானம் நிம்மதியை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் கொஞ்சம் இருந்தாலும், பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. கடின உழைப்பு கை கொடுக்கும். முயற்சிகள் முன்னேற்றம் தரும். தொழிலை விரிவு படுத்தலாம். தொழிலுக்கு தேவையான முதலீட்டை கடனாக பெறலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகள் இல்லை. கணவன் மனைவி வாக்குவாதம் கூடாது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்டபடி எல்லா வேலையும் சரியாக நடக்கும். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் எந்த பிரச்சனையும் இருக்காது. ரொம்பவும் நெருங்கிய நண்பர்களை நம்பாதீங்க. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் வாக்கும் கொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வீகமான நாளாக இருக்க போகின்றது. நேர்தி கடனை செலுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாடு செய்வீர்கள். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நினைத்தபடி நல்லதாக நடக்கும். ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் மனம் புரியும்படி நடந்து கொள்வார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டை வந்து விழும். விடாமுயற்சியை கைவிடாதிங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். மனம் சோர்வு கூடவே கூடாது. சுறுசுறுப்பை நண்பனாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன தடைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பின்னடைவு உண்டாகும். எல்லா விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அவசர முடிவு எடுக்கக் கூடாது. முன் கோபம் கூடாது. ஒன்றுக்கு பலமுறை யோசித்த பின்பு தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அடுத்தவர்களிடம் பேசுவதை இன்று குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அது தவறாக போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான நாளாக இருக்கும். எது சரி, எது தவறு என்று முடிவினை எடுக்க முடியாமல் தடுமாற்றம் இருக்கும். பொறுமையாக இருங்கள். எல்லாவற்றிற்கும் அவசரப்பட்டால், நன்மை நடக்காது. எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் மட்டும்தான் பதில் சொல்லும்.