மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை திறம்பட சமாளிப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சில் இனிமை வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் மன இறுக்கத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களுடைய பிரச்சனைகளில் தலையிடாதீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தகர்த்து வெற்றி நடை போடக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதிடம் அதிகரித்து காணப்படும். எண்ணியதை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்பாராத பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான செய்திகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அவசரப்பட்டு கொடுத்த வாக்குறுதிகள் ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் பொழுதுபோக்குகளில் மனதை செலுத்தாமல் இருப்பது நல்லது. கண்மூடித்தனமாக முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மனம் போன போக்கில் செல்வதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்கள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் ததும்பக் கூடிய நாளாக இருக்கிறது. வருவது வரட்டும் என்கிற மன போக்கு இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனாவசிய பொழுது போக்குகளில் அதிகம் நேரம் செலவிட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். சுய தொழிலில் உள்ளவர்கள் அரசு வழி காரியங்களில் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நம்பியவர்களை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிரிவினை அகலும். சுய தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மௌனம் காப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் விரைவாக செய்து முடிப்பீர்கள், நேர விரயம் ஏற்படாது. தேவையற்ற மன கவலைகளை அகற்றுங்கள். சுய தொழிலில் லாபம் காண புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்ளக்கூடிய தைரியம் இருக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நன்று. சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிடங்களில் வீண் அலைச்சலை சந்திக்க கூடும். உத்தியோகஸ்தர்கள் பேச்சில் நயத்தை கொண்டு வருவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே புரிதல் புதிதாக உண்டாகும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலட்சியம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளில் சில தொந்தரவுகள் அவ்வப்பொழுது வந்து செல்லும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துன்பங்கள் தொலைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைக்கும்.