மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்பனை வளம் அதிகரித்து காணப்படும். எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் மாறுபட்ட அணுகுமுறை கொண்டு பிரச்சனை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை அறியும் வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றிவாகை சுட கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெட்டி விவாதங்களை கைவிடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய முதலீடுகள் செய்யும் பொழுது சாதகமான பலன்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை உங்களை அலட்சியம் செய்தவர்கள் உங்களைத் தேடுவார்கள். சுயதொழிலில் உள்ளவர்களுக்கு தன வரவால் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி குறையும் வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப மேன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் போகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கையாளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடி ஈடேறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் புரிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த செயல்களை செய்யக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. புது பொலிவுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் நிரந்தர முடிவு காணும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகப் பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு. சுபயோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் ஒன்றும் நினைக்க அதை விட வேறு ஒன்று நன்மைகள் தரும் வகையில் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டு. வெளியிட பயணங்களில் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர் விவாதம் செய்யும் பொழுது சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகளை பெற வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஜெயம் உண்டாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். புதிய முயற்சிகள் பலிதம் ஆகும். சுய தொழிலில் உள்ளவர்கள் தூக்கமின்மையால் அவதிப்பட நேரலாம், தேவையான ஓய்வெடுப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட பணிகளில் கிடைத்தது நடக்க வாய்ப்புகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சத்துக்கள் வாங்கும் முயற்சியில் அதிர்ஷ்டங்கள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிந்தனைகளால் சோர்வு உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நயமாக பேசி எதையும் சாதிப்பீர்கள்.