மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமையில் பிரச்சனைகள் வராமல் இருக்க அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல சிந்தனைகள் நீடிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்கள் கூட்டாளிகள் உடனான கருத்து வேறுபாடுகளை கலைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மறையான அணுகுமுறை மற்றவர்களை எளிதாக கவர செய்யும். குடும்ப ஒற்றுமையில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. வீண் செலவுகளை புறக்கணிப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை பிரச்சனைகளை தரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அனாவசிய விமர்சனங்களை புறக்கணியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி மாற்ற வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். சுப காரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரக்கூடிய பாக்கியம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இணக்கமுடன் செல்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிக்கனம் தேவை. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் தெரியாத நபர்களின் அறிமுகங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. சுப காரியங்கள் கைக்கூடி வரும். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களை சாதக பலன் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகளை கால தாமதப்படுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலர் கூடவே இருந்து குழி பறிப்பவர்களும் இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய நட்பு வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. நீங்கள் எதை செய்வதானாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அசையும் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள்.