மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் வீண் செலவுகள் வர வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஏற்றம் காணும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் நாட்டமுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தங்கள் கருத்துகளுக்கு எதிர் வினை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமயோசித புத்தி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் எதிர்பார்த்ததை எதிர்பார்த்தபடி நடக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மன சஞ்சலங்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திப்பர்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். எண்ணியது ஈடேறும். சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நன்மை தரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நல்ல நாளாக இருக்கும் கிடைக்கும். சிறுசிறு வாய்ப்புகளையும் நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி ஏற்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதனையும் அதன் போக்கில் விட்டு விடுவது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்கள் மூலம் சூழ்ச்சிகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நடக்காது என்று நினைத்த ஒரு காரியம் நடக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை வேண்டும், வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் அதிக ஈடுபாடு காண்பிப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூக ரீதியான சிந்தனை அதிகரித்து காணப்படும். எதையும் பொத்தாம் பொதுவாக கணக்கு போடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவிற்கு ஏற்ற செலவுகளும் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவலையுடன் காணப்படுவீர்கள், தேவையற்ற மன பயம் எழக்கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பம் பற்றிய சிந்தனை உங்களுக்கு மேலோங்கி காணப்படும். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுபவ பூர்வமான முடிவுகள் எடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எவரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் லாபம் காண புதிய விஷயங்களை கையாளுவீர்கள். இடமாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிந்தனைகள் தெளிவாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே குழப்பங்கள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உயர் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வழக்குகளில் சிக்கிக்கொள்ள கூடும் குறுக்கு வழியை கைவிடுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் போன போக்கில் செல்வதை தவிருங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணம் சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்