மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கூடுதல் பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மன வலிமை கூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய விடயங்களில் ஆர்வம் பெருகும். பிறரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியிடங்களில் சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொள்வார்கள்.
கடகம் –
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நேரடி மறைமுக எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொது காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சுப செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பிறரின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்.. மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலர் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு புதிய காரியங்களிலும் ஈடுபட வேண்டாம். வெளியில் செல்லும் பொழுது எதிலும் கவனம் தேவை. சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக பலமுறை யோசித்து ஈடுபடுவது நலம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்களின் ஆதரவும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்குகின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். கலைஞர்களுக்கு சற்று தாமதத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.