மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுப்பறியாக இருந்து வந்த தன வரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொன், பொருள் சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இறை வழிபாட்டின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஏமாற்றம் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்பனை வளம் அதிகரித்து காணப்படும். எதையும் அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது. குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஆர்வம் குறைந்து காணப்படும். தேவையற்ற சிக்கல்களில் மூக்கை நுழைக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறு விஷயம் கூட பெரிய பூதாகரமாக வடிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் கூடுதல் சுமையை உணரக்கூடும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சாதகமான முடிவுகள் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய நினைவுகள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி நிமித்தமாக வெளியில் அதிகம் அலைய வேண்டியிருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதையும் போராடித்தான் நீங்கள் பெற வேண்டி இருக்கும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் அவிழும். சுய தொழிலில் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குறை அகன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் யோகம் உண்டு. தொலைதூர உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மன கசப்புகள் மாறும். சுய தொழிலில் எதிர்பாராத மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தளர்வு சுறுசுறுப்பு அடையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் சார்ந்த பிரச்சினைகள் குறைய துவங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனாவசிய மன தயக்கம் அகற்றுவது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற விமர்சனங்களை ஒதுக்கி தள்ளுங்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுபகாரிய முயற்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தற்பெருமை பேசுவதை குறைப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயனற்ற பேச்சுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவை சேமிப்பின் மூலம் சமாளிக்க கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் போராடிய போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகும் நல்ல நாளாகும். சுபகாரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான சூழ்நிலை நிலவுவதால் எதிர்பாராத பணப்புழக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி கைகூடும் யோகம் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயணங்கள் அன்புள்ள பலன் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடைய பேச்சுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பணி சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குழப்பங்கள் தீர நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது.