மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன் பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. சுப காரிய முயற்சிகளில் பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் நிறைவான நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை காலதாமதப்படுத்துங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். சஞ்சலம் நீங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பெறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு உரிய செலவுகளும் வரும். வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனித்தன்மையுடன் செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்களை ஆர்வம் குறையக்கூடும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு மாற்றங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் குறையும். சுப காரிய தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். குடும்ப தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தலை தூக்க ஆரம்பிக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதுரியம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எதையும் நவீனமயமாக சிந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் தேவையற்ற அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகம் செலுத்துவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வமின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறு சிறு மாற்றங்கள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பீர்கள். குடும்பத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அனுபவம் உதவி செய்யும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முன்பின் தெரியாத விஷயத்தில் அகல கால் வைக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவாலான பணிகளை கூட எளிதாக முடிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் விரயங்கள் வரலாம் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி அன்பு தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைகள் மூலம் சாதிக்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு