மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலட்சியம் வேண்டாம். குடும்ப பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டி இருக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்க புதிய சிந்தனைகள் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிரான வியூகங்கள் முறியடிக்கப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை தேவை, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் விவாதம் நடக்கலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப ஒற்றுமையில் மற்றவர்களின் தலையீடு தவிர்ப்பது நல்லது. சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொல்லும் செயலும் ஒன்றென இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் முடிவெடுக்க வேண்டாம். சுய தொழிலில் தேவையற்ற பகை வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அன்பு தொல்லைகள் இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகிப்புத்தன்மை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. மற்றவர்களை எதிர்த்து அனாவசிய குரல் எழுப்ப வேண்டாம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனிவுடன் பேசுவது நல்லது. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையலாம். சமூக சிந்தனை மேலோங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களே ஏமாற்ற வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் புதிய பாதை தெரியும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால்களை எதிர்கொள்ள கூடிய நாளாக இருக்கிறது. எதையும் துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களை எதிர்த்தவர்கள் பின்வாங்குவார்கள். சுய தொழிலில் லாபம் காண புது யுக்திகள் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பெருமை ஏற்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அறிவாற்றல் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் கற்கும் புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமயோஜித அறிவு வெற்றியை தேடி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பு கூடுதலாக தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முடிவுகள் சாதக பலன் கொடுக்காது. ஒன்றுக்கும் மேற்பட்ட முடிவுகளில் குழப்பம் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகள் படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் சாதுரியத்துடன் கையாளுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வரவு வந்து சேரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டது தொடங்கும் நல்ல நாளாக இருக்கிறது. சுப காரியங்களில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.