மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். திட்டமிட்ட காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவேண்டிய பணம் கைக்கு வருவதில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறக்கூடிய வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு பிரச்சனைகள் உங்களுக்கு வந்து செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. பெரிதாக எதையும் போட்டு அலட்டிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று விட்டு விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்புகளால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும் எனினும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சுய கௌரவத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த தீராத பிரச்சனையை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் சுப பலன் உண்டாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரிய தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் அனுகூல பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களுடைய கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரலாம். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டாத விரயங்கள் வரலாம் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. திடீர் பொருட் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக செலவுகள் வந்து சேரும் என்பதால் சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இருக்கின்ற வேலையை காலதாமதம் இல்லாமல் விரைவாக செய்து முடிப்பது நல்லது. அலட்சியம் இழப்புகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பணி சுமையை உண்டாக்கும். ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு அதிகரித்து காணப்படும். புதிய புதிய வாய்ப்புகளை கூடுமானவரை தட்டி கழிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் பணி போல் கரையும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் இழுப்பறியாக இருந்த வேலைகளும் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்ப விஷயம் வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது.