மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேராசை பெருநஷ்டமாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றிவாகை சூடும். ஆரோக்கியம் வழுபெறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரக்கூடிய அதிர்ஷ்டங்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். சுபயோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் மந்தநிலை காணப்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் சில விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். குடும்ப நிம்மதிக்காக சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வரலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட காலம் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்க போகிறது. குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் பொறுமையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் நிறைந்த செயல்கள் செய்யக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய பேரும், புகழும் உயரப் போகிறது. சுய தொழில் செய்பவர்களுக்கு தன லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தகாத நண்பர்கள் சேர்க்கை பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஊக்கம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். சுயத்தொழில் செய்பவர்களுக்கு தேவையற்ற பகைகள் வேண்டாம். வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீம்பு வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சினம் எந்த பிரச்சனையையும் தீர்க்க போவதில்லை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயம் மனதை ஆட்கொள்ள வாய்ப்புகள் உண்டு எனவே அமைதியுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உத்தியோகம் செய்பவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு சிந்தித்து செயல்படுங்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்யும் செயலில் நிதானம் இருந்தால் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசு கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. இறைவழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனோதிடம் உண்டாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீராத பகையும் ஒன்றும் இல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வளரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பரிவு உண்டாக வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற இடங்களில் அகங்காரம் வேண்டாம். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் தேவையற்றவர்களை நம்பி ஏமாற வாய்ப்புகள் உண்டு விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.