மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் நீடிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப அமைதியை நிலை நாட்ட விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோக ரீதியான மாற்றங்கள் சாதகமான பலனை கொடுக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யக் கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பாதியில் நின்ற வேலைகளும் முடிவடைய கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடன் திரும்ப வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முடிவையும் துணிச்சலாக எடுப்பீர்கள். தேவையற்ற விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னுரிமை கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி வாகை சூட கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பயணங்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையில்லாத அலைச்சல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிரடியான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அடங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டங்கள் வர வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சாதக பலன்கள் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் பிறக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அனுகூல பலன் தரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான வேலைகளை கூட சுலபமாக முடிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து சிறு சிறு ஊடல்கள் மறையும். சுய தொழில் உள்ளவர்கள் வெளியிடங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொது காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சவாலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.