உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்கு துணை புரிந்ததற்காக பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் அங்கீகரித்துள்ளனர் .
இந்தத் தடைகள், உக்ரைன் மீதான தாக்குதலில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் பெலாரஷ்ய பிரமுகர்களைக் குறிவைக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் “சில பொருளாதாரத் துறைகள், குறிப்பாக மரம், எஃகு மற்றும் பொட்டாசியம்” ஆகியவற்றையும் தாக்கும் எனவும் கூறப்படுகின்றது.