இலங்கையில் இன்றும் (15-05-2022) நாளையும் (16-05-2022) தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையினால், புகையிரத சேவைகள் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.