சீரற்ற காலநிலையால் ஹப்புத்தளை – தியத்தலாவை இடையேயான ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இணைந்து ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஹப்புத்தளை நிலையத்திலும், பதுளையில் இருந்து வந்த ரயில் பண்டாரவளை நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணக்களம் தெரிவித்துள்ளது.