நாடளாவிய ரீதியில் 400 ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு வேலிகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்காக 1200 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகள் இல்லாத கடவுப்பாதைகள் அதிக எண்ணிக்கையில் புத்தளம் வீதி மற்றும் கரையோரப் புகையிரதப் பாதைகளில் உள்ளன.
இவற்றில் சில கடவைகளுக்கு பொலிஸார் தற்காலிக வேலிகளை பொருத்தியிருந்த போதிலும், புத்தளம் ஆராச்சிக்கட்டுவ புகையிரத கடவையில் அண்மையில் இடம்பெற்ற விபத்தின் பின்னர், அந்த வேலிகள் அகற்றப்படும் என பொலிஸார் தெரிவித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.