கல்கமுவ அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
விபத்தை அடுத்து ரயில் எஞ்சினில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ரயில் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.