இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோர், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு, வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் சற்று முன்னர் அஞ்சலி செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
மகாராணியின் இறுதிச் சடங்கு, இலங்கை நேரப்படி, நாளைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு வெஸ்மினிஸ்டர் அபேயில் இடம்பெறவுள்ளது.