சஜித் பிரேமதாச கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் உள்ளிட்ட ஏனைய எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இவ்வாறான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.