நாட்டின் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ரொஷான் ரணசிங்க முன்மொழிந்துள்ள போதிலும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு இணங்கவில்லை என அறியமுடிகின்றது.
மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவை முன்மொழிய வேண்டும் என சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.