யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மருதனார் பகுதியை சேர்ந்த 16 வயதான இளைஞன் ஒருவர் தொலைபேசியில் பேசியபடி, துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த சிறுவனை கத்தியால் குத்தி, தொலைபேசியை திருடிச் சென்றுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த சிறுவனை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தை அரங்கேற்றிய திருடர்களை யாழ்ப்பாண பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.