யாழ்ப்பாணம், மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த துவிச்சக்சகர வண்டிப் பயணமானது கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து அங்கிருந்து வவுனியாவை நேற்று(01.03.2024) வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர் துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.