கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடா செல்லும் ஆசையில் யாணப்பணத்தை சேர்ந்த குறித்த நபர் பணத்தினை கொடுத்தும் நீண்டகாலமாக தனது பயண ஏற்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இவ்வாறான மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.