யாழ் புங்குடுதீவில் 17 வயதான பாடசாலை மாணவியின் தகாத படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதான இளைஞர்கள் இருவரும் புங்குடுதீவு 4ம் மற்றும் 6ம் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இதன்போது இருவரும் அந்தரங்கமான ஒளிப்படங்களை பரிமாறியுள்ளனர்.
அதன்பின்னர் காதல் முறிவடைந்ததையால் மாணவியின் ஒளிப்படங்களை குறித்த இளைஞன் தனது நண்பர்களுக்கு அனுப்பியிருக்கின்றார்.
அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், மாணவி அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ள பொலிஸார் இருவரை தேடி வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது