யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது தாயார் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில் ,
கடந்த ஒருமாதமாக பாடசாலையில் ஏற்பட்ட மன உழைச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக கூறி பாடசாலை விடுகைப்பத்திரம் எடுத்த நிலையில் அதில், வேறொரு பாடசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் விடுகைப்பத்திரம் வழங்கியுள்ளதாக தாயார் கூறியுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தான் தரம் 11 இல் கல்வி கற்பதாகவும் தெரிவித்தார். அதோடு, அங்கு தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் கூறிய மாணவி பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசியர்கள் குறித்தும் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.