யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (14–08-2024) நடைபெற்றது.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் வருட மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.
இதன்போது வேட்பாளர்களாக இளங்கணேசன் தர்சிகா, மனோகரன் சோமபாலன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
ம.சோமபாலன் 326 வாக்குகளையும் இ.தர்சிகா 50 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்படி அதிக வாக்குகளை பெற்ற ம.சோமபாலன் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.