பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24 ஆம் ஆண்டு எழுச்சி நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு (17) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் இடம்பெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு இந்த பொங்குதமிழ் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

