யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றய தினம் இரவு இரு கோஷ்டிகள் மூர்க்கத்தனமான மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மோதலுடன் சம்மந்தப்பட்ட சந்தேகத்தில் 15 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துவிட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
கொரோனா அபாயம் காரணமாகவே பொலிஸ் பிணை வழங்கப்பட்டபோதும், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.