தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் இன்று நண்பகல் உயிரிழந்தார்.
தெல்லிப்பழை பிரதேச செயகத்தில் ஊழியர்கள் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.