யாழ்.தீவுகளில் சீன நிறுவனத்தினால் தொடங்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா அக்கறையோடு உள்ளது. அதேவேளை, வடக்கில் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதிலும் சீனா ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சீனாவின் இந்த விருப்பங்களை சில தரப்புக்கள் சந்தேகத்துடன் நோக்குவது எமக்கு கவலை அளிக்கின்றது. சீனாவின் இந்த விருப்பத்திற்குப் பின்னால் எவ்வித இரகசிய நோக்கங்களும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலயில், யாழ்.தீவுகளில் சீன நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள உத்தேச மீள்பிறப்பாக்க வலுசக்தி மின் உற்பத்தி திட்டங்களை அந்த நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன என அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.