யாழ்.தீவகத்தில் சில இடங்களில், சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவல் மிகுந்த வருத்தமளிப்பதாக கூறிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அவ்வாறானவர்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது தீவிக பெண்கள் தொடர்பிலான குறித்த சர்ச்சைபேச்சு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விளக்கம்ளித்துள்ளனர். அது குறித்து அவர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
தீவகத்தில் ஒரு இடத்தில் பசில் ராசபக்சவின் பினாமியின் ஹோட்டல் காணப்படுகிறது அரச நிலத்தினை ( கடற்கரை ) அபகரித்தே அந்த ஹோட்டல் 2011 ல் அமைக்கப்பட்டது. அந்த ஹோஒட்டலில் தென்னிலங்கை யுவதிகள் மற்றும் ஏனைய சில மாவட்ட யுவதிகளின் பிரசன்னமும் அடிக்கடி காணப்படுகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
இந்த நிலையில் ஆளுநர் அக்ஹோட்டலுக்கு “உணவருந்த” செல்லும்போது அந்த யுவதிகளை பார்த்துவிட்டு இவ்வாறு எண்ணியிருக்ககூடும் எனவும் கூறியுள்ளனர்.
இவ்வாறே இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலணை பிரதேச சபை போனஸ் உறுப்பினர் அனுசியா, புங்குடுதீவிலுள்ள பெண்கள் சாராயம் விற்பதாகவும் வயிற்றுக்குள் மறைத்து வைத்தவாறு கடத்தி செல்வதாகவும் யாழ் மாவட்ட கச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அலம்பியிருந்தார்.
இது அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டு. அவ்வாறு தீவக பெண்களை தவறான நோக்கத்துடன் கேவலப்படுத்தியிருந்த அனுசியா எனும் பெண்மணியை இன்றுவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை டக்ளஸ் தேவானந்த எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சக கட்சிக்காரனை ( நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் தோழர் ) படுகொலை செய்த கமல் தோழர் எனும் நபர் இன்றும் epdp யில் உலா வருகிறார் . ஒருவேளை இவர்கள் தொடர்பில் ஆளுநர் கூறியிருப்பாரோ ? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது என்றும், தீவகத்தின் சில பகுதிகளில் வாழும் சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவது தமது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.