சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு கடை உரிமையாளருக்கு 40000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று (25) சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையம் சிக்கிக்கொண்டது.
மேற்படி பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் நேற்றையதினம் (25)மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து நேற்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம்,பலசரக்கு கடை உரிமையாளருக்கு 40000 ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.