யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டன.
இந்நிலையில் இவ்வாறு மீட்கப்பட்ட வாள்கள் ஆவா குழு ரௌடிகளுக்கு சொந்தமானவை என கருதப்படுகின்றன.
இணுவில் அண்ணா மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்களை அவதானித்தவர்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த சில தினங்களின் முன்பும் பொலிஸாரால் வாள்கள் மீட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது